லண்டனில் அடித்து கொல்லபப்ட்ட கனடா இளைஞர்
பிரித்தானியாவில் படுகொலை செய்யப்பட்டவர் அடையாளம் காணப்பட்டுள்ளார். 32 வயதான சுரேன் சிவானந்தன் என்பவரே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளதாக அவரது உறவினர்களால் அடையாளம் காட்டியுள்ளனர்
இந்நிலையில், குறித்த படுகொலை வழக்கு தொடர்பில் 3 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். இதில் 37 வயதான ஞானச்சந்திரன் பாலச்சந்திரன் என்பவரை பொலிசார் கைது செய்துள்ளனர்.
அத்துடன், கிரோராஜ் யோகராஜா (30) என்பவரும் கைது செய்யப்பட்டுள விசாரிக்கப்பட்டு வருகின்றார். கைது செய்யப்பட்டுள்ள நபர்களை இன்றைய தினம் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த உள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை,கடந்த வெள்ளி அதிகாலை 4 மணியளவில் கிரேட் லின்ஃபோர்டு பகுதியில் இருந்து படுகொலை செய்யப்பட்ட நிலையில் சடலம் ஒன்றை அந்நாட்டு பொலிஸார் கைப்பற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.