லட்சுமி மேனனுக்கு நோ சொன்ன முன்னணி தமிழ் ஹீரோ
சுந்தரபாண்டியன், கும்கி தொடங்கி லட்சுமி மேனன் நடித்த அனைத்து படங்களும் வெற்றி பெற்றதால் தமிழ் சினிமாவின் ராசியான நடிகையாக பேசப்பட்டார் லட்சுமி மேனன்.
ஆனால் அவரை ஒரு முன்னணி ஹீரோ படத்திலிருந்து தற்போது நீக்கியுள்ளது பலரையும் ஆச்சர்யப்படுத்தியுள்ளது.
ரேணிகுண்டா படத்தை எடுத்த இயக்குனர் பன்னீர் செல்வம் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் கருப்பன் என்ற படத்தில் நடிக்க லட்சுமி மேனனை ஒப்பந்தம் செய்திருந்தனர். ஆனால் தற்போது அவரை நீக்கிவிட்டு சசிகுமாரின் பலே வெள்ளையத்தேவா படத்தில் நடித்த தான்யாவை ஒப்பந்தம் செய்துள்ளனர்.