றியோ ஒலிம்பிக் விளையாட்டு வீரர்களுடன் ரொறொன்ரோ அணிவகுப்பு கொண்டாட்டம
சிவப்பு வெள்ளை கடல் ஒன்று கனடாவின் விளையாட்டு வீரர்களை கொண்டாடும் அணிவகுப்பு பாதைகளை அடைத்துள்ளது.நான் மடங்கு பதக்கங்கள் வென்ற பென்னி ஒல்கிசாக் உட்பட்டவர்கள் ஞாயிற்றுகிழமை இடம்பெறும்இந்த அணிவகுப்பில் கலந்து கொள்கின்றனர்.
16-வயதுடைய ஒல்கிசாக் ஒரு தங்கப்பதக்கம், சில்வர் மற்றும் வெண்கலம் இரண்டு பதக்கங்களை தடாகத்தில் வென்றுள்ளார். இவர் கோடை கால ஒலிம்பிக்கில் என்றுமில்லாத நான்கு பதக்கங்களை வென்ற முதல் கனடியர் என்ற பெயர் பெற்றவர்.இவர் மற்றய கனடிய வீரர்களுடன் இணைந்து- அனைவரும் பெண்கள்-அணிவகுப்பில் கலந்து கொள்கின்றார்.
ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் கனடா கியர் அணிந்தும் மற்றும் கொடிகள் குறியீடுகளை அசைத்த வண்ணம் கலந்த கொண்டனர்.
கனடா விளையாட்டாளர்களின் வெற்றி குறித்து தாங்கள் பெருமையடைவதாக அதினமான இளய தலைமுறையினர் தெரிவித்தனர்.
ஒல்சியாக்கின் நண்பர்கள் சிலர் தனிச்சிறப்பிற்குரிய இளம் விளையாட்டாளரான இவரை பாதுகாப்பாக அணிவகுப்பு ஆரம்பமாகுவதற்கான பகுதிக்கு அழைத்துச் சென்றனர். அங்கு ஒன்ராறியோ முதல்வர் கத்லின் வின் விளையாட்டாளர்களை சந்தித்தார். பின்னர் வின் அணிவகுப்பு பாதையில் நடந்தார்.
இந்த அணிவகுப்பு டன்வோர்த் கிழக்கு சமூக அசோசியேசன் மற்றும் பீச் வில்லேஜ் BIA ஆகியோரால் அமைக்கப்பட்டது.