ரொறொன்ரோவின் ரெக்ஸ்டேல் மாவட்டத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக ரொறொன்ரோ பொலிஸார் தெரிவித்துள்ளார்.
ரொறொன்ரோவின் நகர மண்டபத்தின் வாகன நிறுத்த பகுதியில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை குறித்த துப்பாக்கிச்சூடு இடம்பெற்றுள்ளது.
குறித்த துப்பாக்கிச் சூட்டை தொடர்ந்து காயமடைந்த நபர் அங்கிருந்து காரொன்றில் ஏற்றிச் செல்லப்பட்டு, நிலக்கீழ் வாகன நிறுத்தமொன்றில் விட்டுச் செல்லப்பட்டுள்ளார்.
அங்கிருந்து சுயநினைவற்ற நிலையில் மீட்கப்பட்ட பாதிக்கப்பட்ட நபர் உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.
சந்தேக நபர் குறித்த தகவல்கள் தெரியவராத நிலையில், சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.