ரொறொன்ரோ பெரும்பாக பகுதிகளில் மூ டுபனி எச்சரிக்கை!
ரொறொன்ரோ பெரும்பாக பகுதிகளிற்கு கனடா சுற்று சூழல் மூடுபனி எச்சரிக்கை விடுத்துள்ளது.தெரிவு நிலை கிட்டத்தட்ட பூச்சியத்தில் காணப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ரொறொன்ரோ, ஹமில்ரன் மற்றும் ஹால்ரன், பீல், யோர்க் மற்றும் டர்ஹாம் பிரதேசங்களிற்கும் இந்த அறிவித்தல் செவ்வாய்கிழமை காலை விடுக்கப்பட்டுள்ளது.
லேசான காற்று திணிவு உருகும் பனியுடன் கூடிய மழையை ஏற்படுத்தும் எனவும் இதன் காரணமாக பூச்சிய தெளிவு தன்மை சில பகுதிகளில் 200மீற்றர்கள் வரை காணப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.மூடுபனி நிலைமை இன்று மற்றும் இன்று இரவு வரை நீடிக்கலாம்.
பிற்பகல் தொடக்கம் தென்மேற்கு ஒன்ராறியோவின் பல பாகங்களிற்கும் இந்த எச்சரிக்கை விரிவு படுகின்றது. புதன்கிழமை காலை குளிர்ச்சியான மேற்கு நோக்கிய காற்று மூடுபனியை தெளிவாக்கும்.
மூடு பனி அபாயகரமான வாகனமோட்டுதலிற்கு வழி வகுக்கலாம் என தேசிய வானிலை நிறுவனம் தெரிவிக்கின்றது.
வாகனம் செலுத்திக் கொண்டிருக்கையில் தெளிவு நிலை குறைபடுமாயின் சுடர்களை ஆன் செய்து பாதுகாப்பான இடைவெளியை கடைப்பிடிக்குமாறு சாரதிகள் அறிவுறுத்தப்படுகின்றனர்.
விமான பயணிகளை விமான நிலையத்துடன் தொடர்பு கொண்டு பயண நேர மாற்றங்களை தெரிந்து கொள்ளுமாறு பியர்சன் சர்வதேச விமான நிலையம் தெரிவிக்கின்றது.
ரொறொன்ரோவின் வானிலை முன்னறிவிப்பில் இன்று பூராகவும் மழை பெய்யும் எனவும் பகல் நேர அதி உயர் வெப்ப நிலை 5 C.ஆக காணப்படும் எனவும் கூறப்படுகின்றது.