ரொறொன்ரோ சுகாதார மருத்துவ அதிகாரி விடுத்துள்ள வெப்ப எச்சரிக்கை!
கனடா-ரொறொன்ரோ பெரும்பாகதம் பூராகவும் கொழுத்தும் வெப்பநிலை வந்தடைந்துள்ளதால் வெப்ப எச்சரிக்கை ஒன்றை நகரின் உயர்மட்ட மருத்துவ அதிகாரி விடுத்துள்ளார்.
இன்றய கணிப்பின் படி உயர் வெப்பநிலை 31 C ஆக உள்ளதாகவும் ஈரப்பதனுடன் கூடி கிட்டத்தட்ட 34ஐ அண்மித்ததாக உணரப்படும்.
ஈரப்பதன் மதிப்புக்கள் செவ்வாய்கிழமை வெப்பநிலையை 38ஆக உணரச்செய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது.சாதாரண வெப்பநிலை வெள்ளிக்கிழமை வரை அணுகமாட்டாதென கூறப்பட்டுள்ளது.
குறிப்பிட்ட வெப்ப எச்சரிக்கை கனடா சுற்றுச்சூழல் பிரிவினரால் ரொறொன்ரொ, வாஹன், றிச்மன்ட் ஹில், மிசிசாகா, மார்க்கம், ஒசாவா, மற்றும் ஹமில்ரன் ஆகிய பகுதிகளிற்கு விடப்பட்டுள்ளது.
தாகம் எடுப்பதற்கு முன்னரே நிறைய தண்ணீர் குடிக்குமாறு அனைவரும் அறிவுறுத்தப் படுகின்றனர்.குளிர் சாதன வசதிகள் உள்ள இடங்களில் தங்குமாறும் தளர்வான ஆடைகளை மெல்லிய நிறங்களில் அணியுமாறும் கூறுகின்றனர்.
வயதானவர்கள் முதியோர் வெப்ப அதிகரிப்பினால் விசேடமாக பாதிப்பிற்குள்ளாவார்கள் குளிர்மையாகவும் அதிகமாக நீர் ஆகாரங்களை அருந்துமாறும் வலியுறுத்தப்படுகின்றனர்.
வெப்பத்தை எதிர்ப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
வெப்ப எச்சரிக்கை அறிவிக்கப்பட்டதனால் வெப்பம்-சம்பந்தமான விசாரனைகள் தேவைப்படுபவர்கள் 311 அழைக்கலாம்.