ரொறொன்ரோ குறுக்கு-வில் தாக்குதலும், அதனுடன் தொடர்புடைய சந்தேகத்திற்கிடமான பொதியும்.
கனடா-ரொறொன்ரோ பொலிசார் ரொறொன்ரோவில் இடம்பெற்ற மூவரின் மரணத்திற்கு காரணமான குறுக்கு-வில் தாக்குதலுக்கும் நகரின் டவுன்ரவுனில் கண்டுபிடிக்கப்பட்ட சந்தேகத்திற்கிடமான பொதி ஒன்றிற்கும் தொடர்பு உள்ளதென உறுதிப்படுத்தியுள்ளனர்.இது குறித்த மேலதிக தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.
வியாழக்கிழமை பிற்பகல் ஸ்காபுரோவில் அப்பார்ட்மென்டில் மூவர் குறுக்கு-வில் தாக்குதலினால் இறந்துள்ளதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
இறந்தவர்களில் இருவர் ஆண்கள் ஒரு பெண்.பாதிக்கப்பட்டவர்களின் அடையாளங்கள் வெளியிடப்படவில்லை.
இச்சம்பவம் தொடர்காக 35வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.