ரொறொன்ரோவை விளாசியுள்ள வருடத்தின் முதல் குளிர்கால நிலை?
ரொறொன்ரோ பெருப்பாகத்தில் கனத்த பனி பொழிவு காரணமாக பாடசாலை பேரூந்துகள் ரத்து செய்யப்பட்டன.
செவ்வாய்கிழமை காலை ரொறொன்ரோ பெரும்பாகம் பாரிய அளவிலான குளிர் கால நிலையை எதிர் நோக்க வேண்டிய நிலைக்கு ஆளானது.
உப்பிடும் லாரிகள் ரொறொன்ரோ வீதிகள் பூராகவும் வெளிப்பட்டுள்ளன என குளிர்காலத்தின் செயலாக்க துறை தெரிவித்துள்ளது.
ஒன்ராறியோவின் தென் பகுதி-ரொறொன்ரோ மற்றும் ரொறொன்ரோ பெரும்பாகம்உட்பட-பூராகவும் ஒரு குளிர்கால பயண ஆலோசனை அமுலாக்கப்பட்டுள்ளது.
10-சென்ரி மீற்றர்கள் அளவிலான பனிபொழிவு இன்று காணப்படும் எனவும் வேகமான பனிப்பொழிவு இன்று பூராகவும் எதிர்பார்க்கப் படும் எனவும் கனடா சுற்று சூழல் தெரிவிக்கின்றது.
பனிப்பொழிவு ஒன்ராறியோவின் தென் மேற்கு பகுதிகளில் பிற்பகலில் தீவிரமான மழையாக மாறும். பிற்பகலிற்கு பின்னராக ரொறொன்ரோ பெரும்பாகத்திலும் இந்நிலை ஏற்படும். பனி மழையாக மாறும் இம்மாற்றத்தினால் உறை பனி மழை சில பகுதிகளில் சாத்தியம் எனவும் சுற்று சூழல் தெரிவிக்கின்றது.
வீதிகள் பனியால் மூடப்பட்டு காணப்படுவதுடன் சறுக்கலாகவும் அமையும். போக்குவரத்து நிலைமைகள் குறிப்பிடத்தக்க தாக்கத்தை எதிர்நோக்கலாம்.
சாரதிகள் மேலதிக கவனத்தையும் தங்கள் பயண இலக்கை அடைய மேலதிக நேரத்தை செலவிட வேண்டும் எனவும் அறிவுறுத்தப்படுகின்றனர்.
பீல், யோர்க், டர்ஹாம் மற்றும் ஹால்ரன் பிரதேச பாடசாலை பேரூந்துகள் ரத்து செய்யப்பட்டன.
இன்று காலை பியர்சன் சர்வதேச விமான நிலையத்தில் 15விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டதாக தெரிய வந்துள்ளது.