கனடாவின் சூடான வீட்டு சந்தையின் தாங்கும் தன்மை குறித்த கவலைகள் சம்பந்தமாக ஒன்ராறியோ நிதி அமைச்சர் சார்ள்ஸ் மற்றும் ரொறொன்ரோ மேயர் ஜோன் ரொறியுடன் கலந்துரையாட மத்திய நிதி அமைச்சர் பில் மோர்னியு அழைத்துள்ளார்.
இதனை உறுதிப்படுத்திய மேயரின் காரியாலயம் இதற்கான திகதி வெகு விரைவில் குறிக்கப்படும் என எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
அதிகரித்து வரும் கனடாவின் கடன் மட்டம் குறித்து கவலை கொள்வதாக மோர்னியு சுசாவிற்கு அனுப்பியுள்ள கடிதம் ஒன்றில் தெரிவித்துள்ளார்.
நடுத்தர வர்க்க கனடியர்கள் தங்கள் குடும்பத்தினருக்கு வீடொன்றை வாங்க தங்களால் முடியுமா என அதிக வருத்தமடைந்து வருவதாகவும் குறிப்பிட்ட கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
நமது பெரிய நகர் புற பகுதியில்உருவாகி வரும் இந்த சந்தை நிலை மற்றும் அதன் தாக்கங்கள் குறித்தும் நாம் கவனம் செலுத்த வேண்டுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சந்திப்பிற்கு அரசாங்கத்தின் மூன்று நிலைகளிற்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
சகல சொத்துகளின் சராசரி விலைகளும் ரொறொன்ரோ பகுதிகளில் 33.2 சத விகிதம் அதிகரித்துள்ளது. வீடொன்றின் விலை 2016மார்ச் மாதம் 688,011டொலர்களாக இருந்து கடந்த மாதம் 916,567டொலர்களாக அதிகரித்துள்ளது.