ரொறொன்ரோவிற்கு அதிதீவிர குளிர் எச்சரிக்கை!
கனடா-ரொறொன்ரோவின் பதில் சுகாதார மருத்துவ அதிகாரி ரொறொன்ரோவை அதி தீவிர குளிர் கால நிலை தாக்க இருப்பதால் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
வெப்பநிலை -4 C மற்றும் – 11 C ஆக காணப்படும் என கனடா சுற்றுசூழல் அறிவித்துள்ளது. எனினும் குளிர் காற்றுடன் கூடி -20 C ஆக உணரப்படும் என எச்சரிக்கப்படுகின்றது.
இந்த எச்சரிக்கை வீடற்றவர்களிற்கு தேவையான மேலதிக இடவசதிகள் மற்றும் குளிர்-காலநிலை சம்பந்தப்பட்ட சேவைகளின் தேவைகளையும் அதிகப்படுத்தலாம்.
வீடற்றவர்கள், கீழ் பகுதிகளில் வசிப்பவர்கள், வெளிப்புறங்களில் வேலை செய்பவர்கள், இருதய நோயினால் பாதிக்கப்பட்டவர்கள், சுவாச நோய் கொண்டவர்கள், வயதானவர்கள், சிறு குழந்தைகள், பிள்ளைகள் இக்குளிர் கால நிலையால் பாதிக்கப்படலாம் என அறிவுறுத்தப்படுகின்றனர்.
நகரத்தினால் நிறுத்தப்படும் வரை இந்த எச்சரிக்கை அமுலில் இருக்கும்.
இக்காலப்பகுதியில் குடியிருப்பாளர்கள் பல நடைமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்படுகின்றது.
அடுக்கடுக்கான ஆடைகளை அணிதல், வெளி அடுக்கு காற்று ஊடுருவி செல்ல முடியாதவாறு இருப்பதோடு வெளியே தெரியும் தோல் பகுதிகள் மறைக்கப்பட வேண்டும்.
தொப்பி வெப்பமான கையுறைகள் மற்றும் வெப்பமான பூட்ஸ் அணியவேண்டும். ஈரப்பதமாக இருப்பதால் தாழ்வெப்பநிலை ஆபத்தை தடுக்க உலர்வாக இருப்பது இருப்பது சிறந்தது.
பருத்தி ஆடைகளை பார்க்கிலும் கம்பளி சிந்தட்டிக் ஆடைகள் சிறந்தவை. ஏனெனில் பருத்தி ஈரமாகும் போது வெப்பமாக வைத்திருக்க மாட்டாது.
நீண்ட நேரம் வெளியில நிற்கும் சந்தர்ப்பத்தில் தங்குமிடங்களை நாடவும். குளிர் காற்றினை பொறுத்து தோல் விரைவாக உறைநிலையை அடையலாம்.
மது பானம் தவிர்ந்த வெப்பமான பானங்களை அருந்தவும். வீடுகளை-முக்கியமாக கைக்குழந்தைகள் மற்றும் வயதானவர்கள் வசிக்கும் வீடுகளை குறைந்தது 21ºC ஆக வைத்திருக்க வேண்டும். நண்பர்கள் அயலவர்கள் மற்றும் குடும்பங்களை அழைத்து அவர்களின் நிலவரங்களை அறிந்து கொள்ளவும் என அறிவுறுத்தப்படுகின்றது.