ரொறன்றோவில் ஆகஸ்ட் மாதம் 6ம் திகதி மிகப்பெரிய திருமண விழா!
ஒன்ராறியோவின் Stouffville நகர மேயர் ஜஸ்ரின் அல்த்மன் ஆகஸ்ட் மாதம் 6ம் திகதி நடைபெறவுள்ள தனது திருமணத்திற்கு Stouffville நகரில் உள்ள 46,000 குடியிருப்பாளர்களுக்கும் அழைப்பு விடுத்து இருக்கிறார். இதில் 6 அடி உயரமும் 8 அடி நீளமும் உள்ள cake வெட்டப்படுவதாகவும்,தெரிவிக்கப்பட்டு உள்ளது .
இந்த திருமணமே டொரோண்டோ பெரும்பாக்கத்தில் மிகப்பெரிய திருமண விழா என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. தமக்கு வரும் பரிசு தொகை மற்றும் நன்கொடைகள் அனைத்தும் நகரின் சமூக சேவைக்கு பயன்படுத்தப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்து இருக்கிறார்.