ரொறன்ரோவில் வெஸ்ட் நைல் வைரஸ் தொற்று
ரொறன்ரோவைச் சேர்ந்த குறித்த நபரின் ஆய்வுகூட பரிசோதனைகளிலிருந்து இந்த வைரஸ் தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக ரொறன்ரோ பொதுச் சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
இது குறித்த தகவல்களை வெளியிட்ட ரொறன்ரோ துணை மருத்துவ அதிகாரி டொக்டர், ஹோவார்ட் ஷபிரோ, தற்போது வெஸ்ட் நைல் வைரஸ் தொற்று அபாயம் ரொறன்ரோவில் குறைவாக உள்ள போதிலும் குடியிருப்பாளர்கள் தம்மை பாதுகாத்து கொள்வதற்கு முறையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
ஒருவகை நரம்பியல் தாக்கத்தை ஏற்படுத்தும் வெஸ்ட் நைல் வைரஸானது பெரும்பாலும் நுளம்புகளாலேயே பரவுவதால் நுளம்புகளின் பெருக்கத்தை கட்டுப்படுத்துல் மற்றும் அவற்றின் செயற்திறனை குறைப்பது மூலம் பரவலை கட்டுப்படுத்த முடியும் என்று ரொறன்ரோ பொதுச்சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
அத்துடன் நுளம்புகளை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்தும் ரொறன்ரோ பொதுச்சுகாதார அமைப்பு விழிப்பூட்டியுள்ளது.
குறிப்பாக வெளிப்புறங்களில் செல்லும் போது நீண்ட கை சேட், காற்சட்டைகள், காலுறைகள் மற்றும் தொப்பி அணிந்தவாறு செல்ல வேண்டும் எனவும் பொதுவாக வெளிர்நிற ஆடை அணிந்து செல்வது சிறந்தது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன்,நுளம்பு விரட்டிகளை பயன்படுத்துதல், நுளம்புகள் இனப்பெருக்கம் செய்யும் தேங்கியுள்ள நீர்களை இல்லாதொழித்தல், வீட்டின் ஜன்னல்கள் கதவுகளை பூட்டி வைத்தல் என சில பாதுகாப்பு நடவடிக்கைகளை சுகாதார அமைப்பு அறிவுறுத்தியுள்ளது.
வெஸ்ட் நைல் வைரஸ் தொற்று அறிகுறிகள் சுமார்இரண்டு முதல் 15 நாட்களில் வெளிப்படுத்தப்படும். குறித்த வைரஸால் பாதிக்கப்பட்ட நபருக்கு வாந்தி, குமட்டல், தலைவலி, உடல் வலி, தோல் வெடிப்பு மற்றும் விக்கம், காய்ச்சல் போன்ற அறிகுறிகள் தென்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
– See more at: http://www.canadamirror.com/canada/69186.html#sthash.QjTmq6wk.dpuf