ரொறன்ரோவில் கத்திக் குத்து: பிரதான சந்தேகநபர் காவல்துறையினரால் கைது!
கனடா ரொறன்ரோ நகர் பகுதியில் இன்று (சனிக்கிழமை) காலை இடம்பெற்ற கத்திக்குத்து சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கிங்ஸ் வீதி மேற்குப் பகுதி மற்றும் பாதர்ஸ்ட் வீதி பகுதியில் இன்று காலை 6 மணியளவில் இடம்பெற்ற இந்த கத்திக் குத்து சம்பவத்தில் ஒருவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் குறித்த நபருக்கு உயிராபத்தான காயங்கள் எவையும் இல்லை எனவும் அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மேலும் பிரதான சந்தேக நபரை கைது செய்து விசாரணை நடத்தி வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.