ரொறன்ரோவில் அதிகரிக்கும் விபத்துக்கள்
ரொறன்ரோவில் இந்த வருடத்தின் முதல் ஐந்து மாதங்களில் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் மாத்திரம் வாகனங்களின் சாரதிகள் மற்றும் பயணிகள் என 16பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்தத் தகவலை ரொறன்ரோ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடந்த வருடத்தின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் இந்த எண்ணிக்கை நான்கு மடங்கு அதிகரித்துள்ளது.
அதேவேளை கடந்த வருடம் வாகன விபத்துக்களினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை விடவும் இத்தொகை அதிகமாகும்.
அளவுக்கு அதிகமான வேகம், சமிக்கை விளக்குகளில் நிற்காது சென்றமை மற்றும் வீதி ஒழுங்குகளை கடைபிடிக்காமை என்பனவே இவ்வாறான விபத்துக்களுக்கு காரணங்களாக உள்ளன என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அதேபோன்று, வாகனத்தை செலுத்தும்பொழுது, கைத்தொலைபேசிகளை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை தற்பொழுது அதிகரித்து வருவதாகவும் குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.