ரொனால்டோவால் உயிர் பெற்ற சிறுவன்! நெகிழ வைக்கும் கதை
கால்பந்து விளையாட்டில் சிறந்த வீரர்களில் ஒருவரான போர்ச்சுகலை சேர்ந்த கிறிஸ்டியானோ ரொனால்டோ, போலந்து சிறுவனை கோமாவிலிருந்து மீட்க உதவியுள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
போலந்து நாட்டை சேர்ந்த 15 வயதான David Pawlaczyc என்ற சிறுவனே இவ்வாறு குணமடைந்துள்ளார்.
கடந்த 2013ம் ஆண்டு David Pawlaczyc வாகன விபத்தில் ஒன்றில் சிக்கியுள்ளார். இதனையடுத்து தொடர் சிகிச்சை பெற்று வந்த அவர் மூன்று மாதங்களுக்கு முன் கோமா நிலைக்கு சென்றுள்ளார்.
இந்நிலையில், பல சிகிச்சைகள் அளிக்கப்பட்டும் நினைவு திரும்பாத அவர், ரொனால்டோவின் கோல் அடிக்கும் கமெண்டரிகளை கேட்டு சுய நினைவுக்கு திரும்பி குணமடைந்துள்ளார்.
குணமடைந்த சிறுவன் பெற்றோருடன் Warsaw பயணித்து ரொனால்டோவை நேரில் சந்தித்துள்ளார்.
சிறுவனை, ரொனால்டோ சந்தித்த நெகிழ வைக்கும் வீடியோவை ரியல் மாட்ரிட் அணி தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளது.