ரியோ ஒலிம்பிக் 2016: வரலாற்று சாதனை படைத்த வீராங்கனை
52 ஆண்டுகளில், இந்தியா முதல் முறையாக வால்ட் போட்டியின் இறுதிக்கு தகுதி பெற்று இருக்கிறது.
முதல் முறையாக ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கும் தீபா, தகுதி சுற்றில் எட்டாவது இடம் பிடித்து இருக்கிறார்.
திரிபுரா மாநிலத்தைச் சேர்ந்த தீபா கரம்கர் தான், இந்தியா சார்பில் ஜிம்னாஸ்டிக் போட்டிகளில் தேர்வான முதல் பெண்.
ப்ரொடுனோவா (produnova) வால்ட் ஸ்டைலில் 14,850 புள்ளிகள் பெற்று அசத்தினார் தீபா. 5 சுற்று நடக்கும் போட்டியின், மூன்றாவது சுற்றில் அவர் ஆறாம் இடத்தில் இருந்தார். இந்நிலையில், கனடாவைச் சேர்ந்த ஷாலன் ஆல்சன் 14,950 புள்ளிகள் பெற, தீபா எட்டாம் இடத்திற்குத் தள்ளப்பட்டார்.
மூன்று முறை உலக சாம்பியன் பட்டம் வென்ற அமெரிக்காவின் சைமன் பைல்ஸ் 16,050 புள்ளிகள் பெற்று முதலிடத்தில் இருக்கிறார்.
இரண்டாம் இடத்தில் வட கொரியாவின் ஜாங் உன் ஹாங்கும் (15,683), மூன்றாம் இடத்தில் ஸ்விட்சர்லாந்தின் குய்லா ஸ்டெய்ன்க்ரூபரும் (15,266) உள்ளனர்.