ரியோ ஒலிம்பிக்: முதன்முறையாக தங்கப்பதக்கம் வென்று வரலாறு படைத்த ஜேர்மனி
tரியோ ஒலிம்பிக் மகளிர் கால்பந்து போட்டியில் ஜேர்மனி அணி முதன்முறையாக தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளது.
மகளிர் கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டத்தில் ஜேர்மனி- சுவீடன் அணிகள் மோதின.
விறுவிறுப்பான நடைபெற்ற இந்த ஆட்டத்தின் முடிவில் ஜேர்மனி அணி 2-1 என்ற கோல் கணக்கில் சுவீடனை வீழ்த்தியது.
இதன் மூலம் ஜேர்மனி ஒலிம்பிக் அரங்கில் முதன்முறையாக தங்கப்பதக்கம் வென்று வரலாறு படைத்தது. தோல்வி கண்ட சுவீடன் அணிக்கு வெள்ளிப்பதக்கம் கிடைத்தது.
ஜேர்மனி அணி ஒலிம்பிக் போட்டியில் ஏற்கனவே 3 முறை வெண்கலப்பதக்கம் வென்றுள்ளது. ஆனால் தற்போது தான் முதன்முறையாக தக்கப்பதக்கம் வென்றுள்ளது.
மேலும், முன்னதாக நடைபெற்ற வெண்கலப்பதக்கத்துக்கான போட்டியில் கனடா 2-1 என்ற கோல் கணக்கில் பிரேசிலை வீழ்த்தி வெண்கலப்பதக்கத்தை வென்றது.