ரியோ ஒலிம்பிக் மருத்துவ குழுவில் இரு இலங்கை வைத்தியர்கள்!
ரியோ டி ஜெனிரோ நகரில் இடம் பெறவிருக்கும் ஒலிம்பிக் போட்டிகளில் சேவைகளை வழங்குவதற்காக இலங்கையில் இருந்து இரண்டு வைத்தியர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
சேவைகளை வழங்குவதற்கான 150 பேர் உள்ளடங்கிய வைத்தியர்கள் குழுவில் இலங்கையைச் சேர்ந்த வைத்தியர்கள் இருவரும் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.
இதன்போது வைத்தியர் ஹிமான்தே சில்வா மற்றும் வைத்தியர் சங்கதெபுவன்ன ஆகியோரே தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
இரண்டு வைத்தியர்களும் இன்று பிரேசிலுக்கு செல்ல உள்ளதாக சுகாதார அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ரியோ ஒலிம்பிக் போட்டிகள் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 5ஆம் திகதி முதல் 16ஆம்திகதி வரையில் இடம் பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.