ரியோ ஒலிம்பிக்: பார்வையாளர்களை பிரம்மிப்பில் ஆழ்த்திய நீச்சல் வீராங்கனைகள்!
இதில் வீரர், வீராங்கனைகளின் பதக்க வேட்டை பார்வையாளர்களுக்கு கண்கொள்ளா காட்சியாக அமைந்து வருகிறது.
இந்நிலையில் பார்வையாளர்களின் கண்களுக்கு மேலும் விருந்தளிக்கும் வண்ணம் நேற்று நீச்சல் வீராங்கனைகளின் பிரம்பிக்க வைக்கும் நீச்சல் நடனங்கள் இடம்பெற்றன.
நீச்சல் வீராங்கனைகள் நீருக்குள்ளும், வெளியிலும் ஒரே மாதிரி நீச்சல் சாகசங்களை செய்து பார்வையாளர்களை ஆச்சரியத்தில் மூழ்கடித்தனர்.
இந்த நடன நிகழ்ச்சியில் ரஷ்யா, சீனா, அவுஸ்திரேலியா, மெக்சிகோ, உக்ரைன், ஜப்பான், பிரேசில் உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த நீச்சல் வீராங்கனைகள் கலந்து கொண்டு அனைவரையும் வியப்பில் உறைய வைத்தனர்.
இந்த போட்டி பல லட்சம் ரசிகர்களின் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளதோடு, சமூக வலைத்தளங்களில் பாராட்டுக்களையும் பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.