ரியோ ஒலிம்பிக் கால்பந்து: அர்ஜென்டீனாவை வீழத்தி முதல் வெற்றியை பதிவு செய்தது போர்ச்சுக்கல்
ரியோ ஒலிம்பிக்கில் நடைபெற்றும் வரும் கால்பந்து தொடரில், டி பிரிவில் நடந்த ஆட்டத்தில் போர்ச்சுக்கல் அணி 2-0 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டீனா அணியை தோற்கடித்து முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது.
ஒலிம்பிக் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியின் முதல் பாதி முடிவில், இரு அணிகளும் கோல் போடாததால் 0-0 என சமநிலை ஏற்ப்பட்டது.
பின்னர், இரண்டாவது பாதியின் 66வது நிமிடத்தில் போர்ச்சுக்கல் அணி வீரர் Paciencia முதல் கோல் அடித்தார். தொடர்ந்து 84வது நிமிடத்தில் போர்ச்சுக்கல் அணியின் மற்றொரு வீரர் Pite ஒரு கோல் அடித்தார்.
இதன் மூலம் போர்ச்சுக்கல் அணி 2-0 என போட்டியில் முன்னிலை பெற்றது.
ஆட்டத்தின் இறுதிவரை போராடிய அர்ஜென்டீனா அணி வீரர்களால் ஒரு கோல் கூட போட முடியவில்லை, இதன் மூலம் போர்ச்சுக்கல் அணி 2-0 என அர்ஜென்டீனா அணியை வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்தது.
இந்த வெற்றியின் மூலம் போர்ச்சுக்கல் அணி 3 புள்ளிகள் பெற்று டி பிரிவில் முதல் இடத்தை பிடித்துள்ளது.
2004 மற்றும் 2008ம் நடந்த ஒலிம்பிக் போட்டியில் அர்ஜென்டீனா அணி தங்கபதக்கம் வென்றது நினைவுக்கூரத்தக்கது.