ரியோ ஒலிம்பிக்கில் ஒரு சுவாரஸ்யம்
ரியோ ஒலிம்பிக்கில் அம்மா மற்றும் மகன் 10 மீற்றர் ஏர்பிஸ்டல் பிரிவில் மோதும் போட்டி ஒலிம்பிக் வரலாற்றில் முதல் முறையாக நடைபெற உள்ளது.
ஜார்ஜியா நாட்டை சேர்ந்த நினோசலுக்வட்ஸே(41), அவரது மகன் மச்சாவாரினி(19) இருவரும் 10 மீற்றர் ஏர் பிஸ்டல் பிரிவில் மோத உள்ளனர்.
அம்மாவுடன் ஒரே பிரிவில் மோத உள்ளது குறித்து மச்சாவாரினி கூறியதாவது, ஒரு போட்டியில் பதக்கம் வெல்வதை விட அதில் சாதனை படைப்பதே எனது குறிக்கோள்.
மேலும் அம்மாவுக்கு 19 வயதில் தான் பதக்கம் கிடைத்தது, எனக்கு தற்போது 18 வயது தான் ஆகிறது. இன்னும் பதக்கம் வெல்வதற்கு ஒரு வருடம் இருக்கிறது என்று சிரித்துகொண்டே கூறியுள்ளார்.
நினோசலுக்வட்ஸே கூறியதாவது, தனது மகனுடன் விளையாட இருப்பது சந்தோஷமாக உள்ளதாகவும், அதே சமயம் போட்டியின் போது அவனுக்கு போட்டியாளராகவும் மற்றும் பயிற்சியாளராகவும் இருக்க வேண்டும்.
மேலும் அவனுக்கு தற்போது, இது ஆரம்பம் தான் இன்னும் நிறைய இருக்கிறது. அவனை விட ஒரு போட்டியாளர் மற்றும் பயிற்சியாளர் என்ற முறையில் மிகவும் பதட்டமாக உள்ளதாகவும் கூறியுள்ளார்.
நினோசலுக்வட்ஸே 6 முறை உலக சாம்பியன், 4 முறை ஐரோப்பிய சாம்பியன் மற்றும் பல்வேறு போட்டிகளில் தங்கம், வெள்ளி, வெண்கலம் வென்று சாதனை படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் நினோசலுக்வட்ஸே 50 மீற்றர், 10 மீற்றர் ஏர் பிஸ்டல் பிரிவிகளிலும், மச்சாவாரினி 10 மீற்றர் ஏர் பிஸ்டல் பிரிவிகளில் விளையாட உள்ளனர்.
மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்