ராகவா லாரன்ஸ்க்கு தொடரும் சோதனை !
நடிகர் ராகவா லாரன்ஸ் தன்னை எப்போதும் பிரச்சனைகளில் சிக்காமல் பார்த்துக்கொள்பவர். படங்களில் நடிப்பது, தயாரிப்பது, நடனம் அமைப்பது என பிசியாக இருக்கும் அவருக்கு சில சோதனைகளும் இருக்கிறது.
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மொட்ட சிவா கெட்ட சிவா படம் தலைமறைவாகி சிறையில் இருக்கும் தயாரிப்பாளர் மதனால் சிக்கலாக மாறியது.
பின் வாசு இயக்கத்தில் சிவலிங்கா படத்தில் முழு கவனம் செலுத்தி வந்தார். படத்தை பொங்கலுக்கு வெளியிட முடிவெடுத்தும் 100 தியேட்டர்கள் கூட கிடைக்கவில்லையாம்.
இதனால் ஜனவரியில் வெளியிடலாம் என்றால் சிங்கம் 3 படத்திற்கு மட்டும் அதிக தியேட்டர் கிடைத்துள்ளதாம்.
இதனால் படத்தை அடுத்தமாதம் பிப்ரவரியில் வெளியிட முடிவு செய்துள்ளார்களாம்.