ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் ரயில் நிலையத்தில் குண்டு வெடித்ததில் 10 பேர் உடல் சிதறி பலியாகியுள்ளனர்.
ரஷ்யாவின் செயிண்ட். பீட்டர்ஸ்பர்க் நகரின் 2 சுரங்க ரயில் நிலையங்களில் இரண்டு குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது. உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புத்துறையினர், தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். சுரங்க ரயில் நிலையத்தை சுற்றிலும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. குறித்த குண்டுவெடிப்பில் 10 பேர் உயிரிழந்தனர். 50க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
அவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குண்டிவெடிப்பு நிகழ்ந்ததை அடுத்து, பல்வேறு மெட்ரொ ரயில் நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. அங்கிருந்த பொதுமக்களை உடனடியாக வெளியேற்றியுள்ளனர்.
இந்த சம்பவத்திற்கு எந்த ஒரு தீவிரவாத அமைப்பும் இதுவரை பொறுப்பேற்கவில்லை. இந்நிலையில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரஷ்ய ஜனாதிபதி புட்டின் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். சம்பவ இடத்தை நேரில் பார்வையிட திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.