ரஷ்ய தூதர் சுட்டுக்கொலை: துருக்கியில் பரபரப்பு: கமெராவில் சிக்கிய காட்சி
துருக்கி நாட்டிற்கான ரஷ்ய தூதர் பொது இடத்தில் வைத்து சுட்டு படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
துருக்கி தலைநகர் அங்காராவில் இடம்பெற்ற தாக்குதலில் 62 வயதான Andrey Karlov படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
அங்காராவில் இடம்பெற்ற ஒரு கலை கண்காட்சிக்கு பார்வையிட சென்ற Andrey Karlovவை துப்பாக்கி ஏந்திய நபர் எட்டு முறை சுட்டுள்ளார்.
இதில் படுகாயமடைந்த Andrey Karlov மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், மக்களை பணைய கைதிகளாக பிடித்து வைத்திருந்த மர்ம நபர் மீது பொலிசார் நடத்திய தாக்குதலில் அவன் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும், இந்த தாக்குதலில் ஈடுபட்டவர் ஒரு பொலிஸ் அதிகாரி என கூறப்படுகிறது.
சம்பவத்தை நேரில் பார்த்த ஒரு பத்திரிக்கையின் புகைப்படக் கலைஞர் கூறியதாவது, Andrey Karlovவை நோக்கி எட்டு முறை சுட்ட பின்னர், மர்ம நபர் அல்லாஹு அக்பர் என உரக்க சத்தமிட்டார்.
மேலும், கண்காட்சியில் இருந்த சில படங்களை சேதப்படுத்தினான் என கூறியுள்ளார். இந்த தாக்குதலில் மக்கள் சிலர் காயமடைந்துள்ளனர். தற்போது நடந்துள்ள இந்த தாக்குதல் சம்பவத்தின் மூலம் துருக்கியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.