ரஷ்ய பிரதமருக்கெதிராக போராட்டத்தில் ஈடுபட்டு வந்த அந்நாட்டு எதிர்க்கட்சி தலைவர் உள்ளிட்ட சுமார் 800 போராட்டக்காரர்களை, அந்நாட்டு பொலிஸார் கைது செய்துள்ளனர்.
ரஷ்யாவில் ஊழல் பெருகி விட்டதாக கூறி, பிரதமர் பதவியிலிருந்து டிமிட்ரி மெத்வதேவ் பதவி விலக வேண்டுமென வலியுறுத்தி, அந்நாட்டு எதிர்க்கட்சி தலைவர் அலெக்ஸி நவால்னி தலைமையில் இடம்பெற்ற போராட்டத்தின் போது, வன்முறைச்சம்பவங்களில் ஈடுபட்ட குற்றத்திற்காக சுமார் 800 பேரை பொலிஸார் கைது செய்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் பகிர்ந்துள்ளன.
மேலும் ரஷ்யா முழுவதும் 99 நகரங்களில் போராட்டம் நடத்துவதற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில், 72 இடங்களில் போராட்டம் நடத்துவதற்கு அனுமதி அளிக்கப்படவில்லை, இந்நிலையில் தலைநகர் மொஸ்கோவில் நடந்த போராட்டத்துக்கு எதிர்க்கட்சி தலைவர் அலெக்சி நவால்னி தலைமையில் பெரும்திரளானவர்கள் பங்குபற்றியுள்ளனர்.
மேலும் மொஸ்கோ தவிர்த்த சென் பீட்டர்ஸ்பார்க், விலாடி வோஸ்டோக், நவோசி பிரிஸ்க் மற்றும் டாமஸ்க் உள்ளிட்ட பல நகரங்களில் நடந்த போராட்டத்தில் ஈடுபட்டவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அத்தோடு ரஷ்ய ஜனாதிபதி விளாமிடிர் புட்டினை எதிர்த்து செயற்பட்டுவரும், எதிர்க்கட்சி தலைவர் அலெக்சி நவால்னி எதிர்வரும் 2018ஆம் ஆண்டு இடம்பெறவுள்ள ரஷ்ய ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ள தக்க அந்நாட்டு ஊடகங்கள் தகவல் பகிர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது
.