ரயிலில் கொள்ளையடிக்கப்பட்ட ரிசர்வ் வங்கி பணம்: தடயங்கள் சிக்கின!
ரிசர்வ் வங்கியின் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்த விசாரணையில் குற்றவாளிகளின் கைகேரகை, ரத்த சிதறல்கள் ஆகியவை தடயங்களாக கிடைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நேற்று சேலத்தில் இருந்து சென்னை ரிசர்வ் வங்கிக்கு 23 டன் எடை கொண்ட, சுமார் 342 கோடி பணம் 228 ரயில் பெட்டிகளில் சென்னை எழும்பூர்க்கு கொண்டுவரப்பட்டது.
ரயில் சென்னை வந்த பிறகே பணம்(5.78 கோடி) கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பொலிசாருக்கு தெரியவந்தது.
இதையடுத்து விரைந்து வந்த தடவியல் நிபுணர்களும், கைரேகை நிபுணர்களும் கொள்ளையடிக்கப்பட்ட ரயில் பெட்டியில் சுமார் 9 மணி நேரம் ஆய்வில் ஈடுபட்டனர்.
ஆய்வில் சந்தேகத்திற்குரிய வகையில் 4 கைரேகைகளும், சில இரத்த சிதறல்களும் இருந்ததால், அவை உடனடியாக ஆய்வு கூடத்திற்கு அனுப்பபட்டுள்ளது.
ஏற்கனவே கொள்ளை சம்பவங்களில் ஈடுபடும் கொள்ளையர்களுடன் கைரேகை ஒப்பிட்டும் பார்க்கும் பணி நடைபெறுகிறது.
இது குறித்து ரயில்வே கோட்ட மேலாளர் அரிசங்கர் வர்மா கூறியதாவது, சேலத்தில் இருந்து புறப்பட்ட ரெயில் விருத்தாசலத்திற்கு 10 நிமிடம் முன் கூட்டியே வந்தது, ஆனால் சென்னைக்கு 10 நிமிடம் காலதாமதமாக வந்துள்ளது.
மேலும் வங்கி அதிகாரிகள் ரெயில் பெட்டியில் 23 டன் பழைய நோட்டுகள் இருப்பதாக கூறி அதற்கான கட்டணத்தை செலுத்தினர். ஆனால் ரிசர்வ் வங்கி இது குறித்து தங்களிடம் பாதுகாப்பு எதுவும் கோரவில்லை எனவும் கூறினார்.
குறிப்பாக ரயில் சேலத்தில் இருந்து சென்னை வருவதற்குள் பத்து இடங்களில் நிறுத்தப்பட்டு வந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.