ரணில் – மைத்திரிக்கு ஐ.நாவில் இருந்து ஒரு கோரிக்கை..! தமிழர்களின் உரிமை பாதுகாக்கப்படுமா..?
இலங்கையில் நல்லிணக்கம் மற்றும் சமாதானம் தொடர்பான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட வருகின்ற நிலையில், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையிலிருந்து இலங்கை அரச தலைவர்களுக்கு கோரிக்கை ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளது.
இலங்கையில், இடம்பெற்றதாக கூறப்படும் மனித உரிமை மீறல்கள் மற்றும் யுத்தக்குற்றச்சாட்டுகள் தொடர்பில் விசாரணைகள் எதுவும் முன்னெடுக்கப்படவில்லை.
இதனால் தமிழ் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, மனித உரிமை மீறல்கள் தொடர்பில் ஜனாதிபதி மற்றும் பிரதமர் விசாரணைகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 34வது கூட்ட தொடர் இடம்பெற்று வரும் நிலையில், அதில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த தென்னாபிரிக்க மனித உரிமைகள் சட்டத்தரணி கிறிஸ் இவ்வாறு கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளார்.