முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் (Ranil Wickremesinghe) தோல்வியின் பின்னணியில் இவ்வருடம் நாடாளுமன்றத் தேர்தலில் சிலிண்டரில் போட்டியிடும் ஒரு குழுவினர் செயற்பட்டதாக ஐக்கிய தேசியக் கட்சியின் மினுவாங்கொடை தொகுதி அமைப்பாளர் அஷு மாரசிங்க (Ashu Marasinghe) தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு இன்று (09) கருத்து தெரிவித்த அவர், சிலிண்டர் சின்னத்தில் இருந்து இம்முறை களமிறங்கியுள்ள ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர் அதிகமானவர்களை நாடாளுமன்றத்திற்கு தெரிவாக வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சி
மேலும், ஐக்கிய தேசியக் கட்சியை அழித்து ஜனாதிபதியை சந்திக்கும் வாய்ப்பை தடுத்த ஒரு கும்பல் சிலிண்டர் சின்னத்தில் இருப்பதாகவும் அவர்களை இந்த தேர்தலில் தோற்கடிக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அவர்கள் வெற்றி பெற்றால் தலை நிமிர்ந்து விடுவார்கள் என்றும், அத்தகையவர்களை தோற்கடிக்கப்பட வேண்டும் என்றும் அஷு மாரசிங்க அங்கு குறிப்பிட்டுள்ளார்.
நாடாளுமன்ற தேர்தல்
இவ்வாறானவர்களை தோற்கடித்து ஐக்கிய தேசியக் கட்சியின் அனைத்து உறுப்பினர்களையும் நாடாளுமன்றத்திற்கு அனுப்ப வேண்டும் எனவும் அஷு மாரசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.
அத்தோடு, ஐக்கிய தேசியக் கட்சியின் செயலாளர் நாயகம் பாலித ரங்கே பண்டாரவை தற்போது காண்பதற்கே இல்லாததால், எதிர்காலத்தில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தலதா அத்துகோரளவை நியமிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பதாகவும் அவர் கூறியுள்ளாார்.