ரஞ்சித் படத்தில் சூர்யாவின் கதாபாத்திரம் இதுதான்
ரஜினியுடன் கபாலி படத்தில் பணியாற்றியதால், இயக்குனராக ஒரு படி மேலே சென்றுவிட்டார் பா.ரஞ்சித். இவர் அடுத்து நடிகர் சூர்யாவை வைத்து ஒரு புதிய படத்தை இயக்கவுள்ளார்.
ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த படத்தில் சூர்யா பாக்ஸராக நடிப்பார் என கூறப்படுகிறது.
தற்போது S3 படத்தில் பிஸியாக இருக்கும் சூர்யா, அதை முடித்த பிறகு சில மாதங்கள் இடைவெளி எடுத்து உடல் எடையை கொஞ்சம் ஏற்றி பாக்ஸிங் பயிற்சி பெற்று , ரஞ்சித் படத்தில் நடிக்க தொடங்குவார் என தெரிகிறது.