கபாலி படத்துக்குப் பிறகு மீண்டும் ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு, வரும் 28ம் தேதி சென்னையில் தொடங்குகிறது. ஹீரோயின் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் முடிவாகமல் இருந்தது. இந்நிலையில் ரஜினிகாந்துக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஹுமா குரேஷி ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அனுராக் காஷ்யாப் இயக்கிய ‘Gangs of Wasseypur’ என்ற ஹிந்தி படத்தின் மூலம பாலிவுட்டில் பிரபலமான ஹுமா குரேஷி அதனை தொடர்ந்து பல ஹிந்தி படங்களில் நடித்துள்ளார்.
ரஜினிகாந்த் மருமகனும், நடிகருமான தனுஷின் வுண்டர்பார் ஃபிலிம்ஸ்’ நிறுவனம் தயாரிக்கிறது. இந்தப் படத்தின் கதை, மும்பையில் வாழ்ந்து மறைந்த பிரபல தாதா ஹாஜி அலி மஸ்தானின் வாழ்க்கைச் சம்பவங்களை மையமாக வைத்து உருவாகிறது என்று, இணையதளங்களில் தகவல் வெளியானது. மும்பையிலுள்ள ஹாஜி அலி மஸ்தான் குடும்பத்தினர் தரப்பில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இது கண்டிப்பாக ஹாஜி அலி மஸ்தான் கதை கிடையாது. மேலும், இது கேங்ஸ்டர் கதையும் கிடையாது என்றும் பட இயக்குனர் ரஞ்சித் தெரிவித்தார்.