ரஜினிகாந்த் காலில் வரிசையாக விழும் இவர்கள் யார்? வைரலாகும் வீடியோ
தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு உலக அளவில் ரசிகர்கள் இருக்கிறார்கள். பிரம்மாண்டமான படங்களில் தற்போது நடித்து வரும் இவர் பாக்ஸ் ஆஃபிஸ் வசூலை அள்ளிவிடுகிறார்.
இயக்குனர் சங்கரின் 2.0 படத்தில் நடித்து வரும் அவர் மீது சமீபத்தில் ஜல்லிக்கட்டு விசயத்தால் சில எதிர்மறை விமர்சனங்கள் விஸ்வரூபம் எடுத்தன.
சமூக வலைதளங்களிலும் அதை நாம் பார்க்கமுடிந்தது. தற்போது அவர் பார்க்க சென்ற சிலர் அவரின் காலில் விழுந்து புகைபடங்களை எடுத்துக்கொண்ட வீடியோ ஒன்று வைரலாகியுள்ளது.