பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 400 விக்கெட் வீழ்த்திய இலங்கை வீரர் ரங்கன ஹெரத்திற்கு சச்சின் டெண்டுல்கர் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்ணனி வீரரான ரங்கன ஹெரத், பாகிஸ்தானுக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் தனது 400-வது விக்கெட்டை வீழ்த்தி சாதனை புரிந்துள்ளார்.
மேலும், டெஸ்ட் போட்டியில் 400 விக்கெட்டுகளை வீழ்த்திய 5-வது ஸ்பின்னர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார். இதற்கு முன் இலங்கையின் முத்தையா முரளிதரன், ஆஸ்திரேலியாவின் ஷேன் வாரன் மற்றும் இந்தியாவின் அனில் கும்ப்ளே, ஹர்பஜன் சிங் ஆகியோர் டெஸ்ட் போட்டிகளில் 400 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளனர்.
இந்நிலையில், ஹெராத்திற்கு சச்சின் டெண்டுல்கள் வாழ்த்து தெரிவித்துள்ளார். அமைதிப் படையான இலங்கை அணியின் வீரர் இத்தகைய சாதனை புரிந்தது மிகவும் மகிழ்ச்சி. ரங்கன ஹெரத்திற்கு எனது வாழ்த்துக்கள் என சச்சின் டுவிட் செய்திருந்தார்.
இதேபோல் ஹெரத்தின் சாதனைக்கு பல்வேறு கிரிக்கெட் வீரர்களும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.