ரகசிய திருமணம் செய்து கொண்ட நயன்தாரா? அதிர்ச்சி தகவல்
நடிகை நயன்தாரா இன்று கோலிவுட் ராணியாகிவிட்டார். அதிக படம், அதிக சம்பளம் என பல விஷயங்களில் முன்னணியில் இருக்கும் இவர் காதல் விசயங்களில் அடிக்கடி அடிப்பட்டவர்.
தற்போது இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் காதல் வசப்பட்டவர் விரைவில் அவரை திருமணம் செய்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் இவர் சென்னையில் வைத்திருந்த அடுக்கு மாடி பிளாட் வீடு போக இன்னும் ஒரு வீட்டை வாங்கியுள்ளாராம். இருவரும் ரகசிய திருமணம் செய்து கொண்டதாக ஒரு தகவல் கோலிவுட்டில் பரவி வருகிறது.
ஒரே வீட்டில் இயக்குனருடன் வசிக்கும் இவர் தானா சேந்த கூட்டம் படத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில் தற்போது நயன் இருக்கும் படங்களில் நடித்து முடித்துவிட்டு விரைவில் திருமண தேதியை சொல்ல இருக்கிறாராம்.
இப்போதே சொன்னால் பட வாய்ப்புகள் குறைந்து போய்விடுமோ என நினைக்கும் அவர் மார்க்கெட் இருக்கும் வரை நன்றாக சம்பாதித்து விட்டு, திருமணத்திற்கு பின் தயாரிப்பு நிறுவனம் ஆரம்பித்து விடலாம் என முடிவில் இருக்கிறாராம்.