யேமன் தலைநகரை இலக்குவைக்கும் சவுதி விமானப்படை
யேமன் தலைநகர் சனாவில் மனிதாபிமான செயற்பாட்டாளர்களால் இயக்கப்பட்ட மருத்துவமனையொன்று நேற்று (திங்கட்கிழமை) சவுதி அரேபிய படையினரின் விமானத் தாக்குதலிற்கு இலக்காகி உள்ளது.
இந்த தாக்குதலில் 25 பேர் உயிரிழந்துள்ளதாக ஆரம்பக்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, இன்று காலை சவுதி போர் ஜெட் விமானங்கள் தலைநகர் சனாவின் பல்வேறு பகுதிகளிலும் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளது.
மேலும், குறித்த தாக்குதலில் மருத்துவமனை உள்ளிட்ட சில குடியிருப்பு பகுதிகளிலும் பலத்த சேதமடைந்துள்ளதாக அரபுமொழி ஊடகம் ஒன்று அறிக்கையிட்டுள்ளது.
இன்று அதிகாலை குடியிருப்புப் பகுதியொன்றை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட விமானத் தாக்குதலில் 3 பேர் உயிரிழந்துள்ளதாகவும், அவர்களில் 2 பெண்கள் மற்றும் ஒரு குழந்தையும் அடங்குவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதேவேளை, சனாவின் வடபகுதி நகர்களான அட்டான் மற்றும் Nihm ஆகியவற்றிலும் சவுதி வான்படை இன்று தாக்குதல்களை மேற்கொண்டிருப்பது அறியக் கிடைத்துள்ளது.
இருந்த போதிலும், குறித்த தாக்குதல்களின் சேதவிபரம் தொடர்பில் எதவித தகவல்களும் வெளியாகவில்லை.
இந்த நிலையில், நேற்றைய மருத்துவமனை தாக்குதலான எல்லைகளற்ற வைத்தியர்கள் என்ற அமைப்பினால் முன்னெடுக்கப்பட்ட மனிதநேய செயற்பாட்டாளர்களின் மருத்துவமனையென்றும் இதில் 25இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பதாகவும் அறிக்கைகள் தெரிவிக்கின்றன