யு.எஸ். பல்கலைக்கழகத்தில் தாக்குதல் நடத்தியவர் யார் தெரியுமா?
அமெரிக்காவின் ஒஹாயோ பல்கலைக்கழகத்தில் தாக்குதல் நடத்திய மாணவர் யார் என்று அடையாளம் தெரிய வந்துள்ளது.
அமெரிக்காவில் உள்ள ஒஹாயோ பல்கலைக்கழகத்திற்குள் புகுந்த நபர் அங்கிருந்த கூட்டத்தை நோக்கி தனது காரை ஓட்டி மோதினார். மேலும் தான் வைத்திருந்த கத்தியால் பல்கலைக்கழகத்தில் இருந்தவர்களை தாக்கினார்.
இந்த தாக்குதலில் 11 பேர் காயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். யாருடைய உயிருக்கும் ஆபத்து இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே தாக்குதல் நடத்திய நபரை போலீசார் சுட்டுக் கொன்றனர். தாக்குதல் நடத்தியவர் சோமாலியா வம்சாவளியைச் சேர்ந்த அப்துல் ரசாக் அல் அர்தான் என தெரிய வந்துள்ளது.
தாக்குதலுக்கான காரணம் உடனே தெரியவில்லை. இது தீவிரவாத தாக்குதலாக இருக்கலாம் என போலீசார் கருதுகிறார்கள். அர்தான் 1998ம் ஆண்டு பிறந்ததாக நம்பப்படுகிறது.
பல்கலைக்கழகத்தில் மூன்றாம் ஆண்டு படித்து வந்த அவர் வளாகத்தில் தொழுக போதிய வசதி இல்லை என்று தெரிவித்து வந்துள்ளார். மேலும் அர்தான் என்ற பெயரில் பல்கலைக்கழக வளாகத்தில் தொழுக வசதி இல்லை என ஒரு கட்டுரை மாணவர்கள் நடத்தும் தி லந்தர்ன் செய்தித்தாளில் வந்துள்ளது.