ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்திருந்த ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா இனிதே தொடங்கியுள்ளது.
ஹைதராபாத் ராஜிவ்காந்தி மைதானத்தில் நடைபெற்ற முதல் போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின.
இதில், முன்னாள் சாம்பியனான ஹைதராபாத் அணி 35 ஓட்டங்கள் வித்தியசாத்தில் பெங்களூரு அணியை வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்தது.
நாணயசுழற்சியில் வெற்றி பெற்ற பெங்களூரு அணித்தலைவர் வாட்சன் களத்தடுப்பை தெரிவு செய்தார். அதன் படி முதலில் களமிறங்கிய ஐதராபாத் அணி, 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு அணி 207 ஓட்டங்கள் எடுத்தது.
அதிரடியாக விளையாடிய யுவராஜ் சிங் 7 பவுண்டரி, 3 சிக்சர் என 62 ஓட்டங்கள் எடுத்தார். ஹென்ரிகியூஸ் 52 ஓட்டங்கள் எடுத்தார்.
208 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பெங்களூரு அணி, 19 ஓவரில் 172 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
இதன் மூலம் 35 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஹைதராபாத் அணி ஐபிஎல் சீசன் 10ல் முதல் வெற்றியை பதிவு செய்து, புள்ளி பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.
இரண்டாம் இணைப்பு:
இந்த வருடம் 8 அணிகளுமே தங்களது சொந்த ஊரில் துவக்க விழா நிகழ்ச்சிகளை நடத்திக்கொள்ள வழி செய்யப்பட்டுள்ளது.
இதன்படி இன்று ஹைதராபாத், நாளை புனே, நாளை மறுநாள் குஜராத், 8ம் தேதி பஞ்சாப், அதே நாளில் பெங்களூர், 9ம் தேதி மும்பை, 13ம் தேதி கொல்கத்தா, 15ம் தேதி டெல்லி அணிகள் துவக்க விழா நிகழ்ச்சிகளை நடத்த உள்ளன.
எமி ஜாக்சன், ரிதேஷ் தேஷ்முக், டைகர் ஷரோப், ஷ்ரதா கபூர், பிரனீதி சோப்ரா உள்ளிட்ட பல பிரபலங்கள் துவக்க விழா நிகழ்ச்சிகளில் பங்கேற்றனர்.