ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இலங்கை குறித்து நிறைவேற்றப்பட்ட தீர்மானமானது யுத்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களை கருத்திற்கொள்ளவில்லையென நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் அனைத்துலக விவகாரங்களுக்கான அமைச்சர் மாணிக்கவாசகர் தெரிவித்துள்ளார்.
இலங்கை குறித்து ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் நேற்று முன்தினம் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் பற்றி கருத்து தெரிவிக்கும்போதே மாணிக்கவாசகர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
மேலும் நாடுகளின் நலன்சார்ந்தே தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அந்தவகையில் போர்க்குற்றங்களுக்கும், இனப்படுகொலைக்கும் இலங்கையை பொறுப்புக்கூற வைக்க அனைத்துலக குற்றவியல் நீதிமன்றம் அல்லது அதற்கு சமமான அனைத்துலக தீர்ப்பாயங்களே அவசியமெனவும் மாணிக்கவாசகர் வலியுறுத்தியுள்ளார்.
அதனை நோக்கியே எமது செயற்பாடுகள் அமையுமெனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
இதேவேளை ஈழத்தழிழர்களுக்கு நீதியை பெற்றுக்கொடுக்க ஐக்கிய நாடுகள் மட்டுமின்றி அனைத்துலக அரங்கும் இருக்கின்றதெனவும் மாணிக்கவாசகர் குறிப்பிட்டுள்ளார்.