யாழ்ப்பாண மாவட்டத்தில் இதுவரைக்கும் 8 ஆயிரத்து 825 விவசாயிகளால் 2017/2018 ம் ஆண்டு காலபோகத்தில் 11 ஆயிரத்து 282 ஏக்கரில் நெற் செய்கை மேற்கொள்வதற்காக பதிவுகளை மேற்கொண்டதன் அடிப்படையில் 61 மில்லியன் ரூபா மாணியம் வழங்கப்படவுள்ளதாக மாவட்ட கமநல சேவைத் திணைக்கள ஆணையாளர் இ.நிசாந்தன் தெரிவித்தார்.
இது தொடர்பில் கமநல ஆணையாளர் மேலும் விபரம் தெரிவிக்கையில் ,
யாழ்ப்பாண மாவட்டத்தின் 15 கமநல சேவை நிலையங்களின் ஊடாகவே குறித்த எண்ணிக்கை விவசாயிகள் காலபோக நெற்செய்கைக்கான பதிவுகளை இதுவரை மேற்கொண்டுள்ளனர். இவர்களிற்கான விண்ணப்ப படிவங்கள் அனைத்தும் பூர்த்தி செய்து அனுப்பப்பட்டு கொடுப்பனவிற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இதேநேரம் காலபோக பசளை மாணியத்திற்கான பதிவுகளை தவற விட்டவர்கள் எதிர்வரும் 20ம் திகதிக்கு முன்னரும் மேட்டுப் பயிர்ச் செய்கையில் மிளகாய் , வெங்காயம் , உருளைக் கிழங்கு , சோயா , சோழம் பயிர்களிற்கான பசளைகளிற்கு எதிர் வரும் 24ம் திகதிகளிற்கு முன்பாகவும் தங களிற்குரிய கமநல சேவை நிலையங்களில் பதிவுகளை மேற்கொள்ள முடியும் . என்றார்.