யாழ்ப்பாணக் குடாநாட்டில் 30 ஆயிரம் இளைஞர்கள் வேலை வாய்ப்பிற்காக விண்ணப்பித்து விட்டு காத்திருக்கும் நிலையில் யாழ் மாவட்டச் செயலகம் மற்றும் பிரதேச செயலகங்களிற்கு சிற்றூழியர்களாக தென்னிலங கைச் சேர்ந்தவர்கள் இரகசியமாக நியமனம் பெற்று வருவதாக சுட்டிக்காட்டப்படுகின்றது.
யாழ்ப்பாண மாவட்டத்தின் மாவட்டச் ணெயலகம் மற்றும் பிரதேச செயலகங்களில் கானப்படும் சிற்றூழியர்கள் வெற்றிடத்திற்கு க.பொ.த சாதாரண சித்தியுடன் நேரடியாகவே உள்நாட்டு அலுவல்கள் அமைச்சினால் நியமனம் வழங்கப்பட முடியும். இருப்பினும் அந்த அந்த மாவட்டங்களில் கானப்படும் வெற்றிடங்களிற்கு உள்ளூரில் வேலை வாய்ப்பு இன்றிக் கானப்படும் இளைஞர்களில் இருந்தே குறித்த நியமனம் வழங்கப்படுவதே வழமையாகும்.
இதேநேரம் குறித்த வெற்றிடங்கள் நீண்டகாலமாக கானப்படுவதன் அடிப்படையில் அவற்றினை நிரப்பப்படாத காரணத்தினால் தற்காலிகமாக நாட் சம்பள அடிப்படையில் சிற்றூழியர்களை மட்டும் மாவட்டச் செயலாளர் அமைச்சின் அனுமதியுடன் பணிக்கமர்த்த முடியும் என்ற அடிப்படையில் மாவட்டத்தில் கானப்படும் அதிக வெற்றிடங்களில் சில வெற்றிடங்களிற்கு ஒரு சிலர் மாவட்டச் செயலகத்தில் நீண்ட காலமாக பணியில் உள்ளனர்.
இந்த நிலையில் தற்காலிகமாக பணியாற்றுபவர்களையோ அல்லது மாவட்டத்தில் வேலை வாய்ப்பு இன்றிக் கானப்படும் 30 ஆயிரம் இளைஞர்களையும் கருத்தில் எடுக்காது சாதாரண ஊழியர்களைக்கூட தென்னிலங்கையில் இருந்தே இரகசியமான முறையில் நியமிக்கப்படுகின்றனர். இவ்வாறு அண்மையில் மருதங்கேணி பிரதேச செயலகத்திற்கு ஒரு ஊழியரும் மாவட்டச் செயலகத்திற்கு ஒருவரும் நியமிக்ப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்படுகின்றது.
இதேநேரம் கடந்த ஆண்டும் 6 பேர் இதேபோன்று தென்னிலங்கை இளைஞர்கள் இரகசியமான முறையில் நியமிக்கப்பட்டபோதும் பலரும் சுட்டிக்காட்டிய நிலையிலும் எந்தவொரு நடவடிக்கைகளும் இடம்பெறவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.