எதிர்வரும் மே தினத்தின்போது ஒன்றிணைந்த எதிரணி அரசாங்கத்தின் மீது அடுத்த தாக்கதலொன்றை நடத்த தயாராக உள்ளதாக அதன் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் டி சொய்ஸா தெரிவித்துள்ளதாக ஆங்கில ஊடகமொன்று தெரிவித்துள்ளது.
மஹிந்த அணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்தில் இணைய மாட்டார்கள் என ஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் சொய்ஸா தெரிவித்துள்ளார்.
ஆனால், அரசாங்கத்தில் உள்ள சிரேஸ்ட அமைச்சர்கள் சிலர் ஒன்றிணைந்த எதிரணியுடன் இணைய உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கத்தில் தாம் வகிக்கும் பதவிகளைத் துறந்து எதிர்வரும் ஓகஸ்ட் மாதமளவில் அவர்கள் ஒன்றிணைந்த எதிரணியுடன் இணைவார்கள் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.