Xiaomi எனும் ஸ்மார்ட் கைப்பேசி வடிவமைப்பு நிறுவனம் Mi 6 எனும் ஸ்மார்ட் கைப்பேசியினை அண்மையில் அறிமுகம் செய்திருந்தது.
இந்நிலையில் குறித்த கைப்பேசியின் மேம்படுத்தப்பட்ட புதிய பதிப்பு ஒன்றினை தற்போது சீனாவில் அறிமுகம் செய்துள்ளது.
இக் கைப்பேசியானது Xiaomi Mi 6 Ceramic என அழைக்கப்படுகின்றது.
அதாவது கைப்பேசியின் புறப்பகுதியானது கவர்ச்சிகரமான மாபிளினால் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதில் Qualcomm Snapdragon 835 Processor, பிரதான நினைவகமாக 6GB RAM மற்றும் 128GB சேமிப்பு நினைவகம் என்பன காணப்படுகின்றன.
இவற்றுடன் 4K வீடியோ பதிவு செய்யக்கூடிய 12 மெகாபிக்சல்களை உடைய பிரதான கமெரா, 1080p வீடியோ பதிவு செய்யக்கூடிய 8 மெகாபிக்சல்களைக் கொண்ட வீடியோ அழைப்புக்களை ஏற்படுத்துவதற்கான கமெரா என்பனவும் தரப்பட்டுள்ளன.
இப் புதிய பதிப்பின் விலையானது 435 அமெரிக்க டொலர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.