மெக்சிக்கோ விசா விலக்களிப்பு! போதைப்பொருள் கும்பல்கள் தமது நடவடிக்கைகளை கனடாவினுள் விஸ்தரிக்கும் அபாயம்!
Postmedia நிறுவனத்தினால் பெற்றுக்கொள்ளப்பட்ட அரச ஆவணங்களின் பிரகாரம், டிசம்பர் 1 உடன் அமுலுக்கு வந்த மெக்சிக்கோ நாட்டினர்க்கான விசா விலக்களிப்பின் பின்னர், மெக்சிக்கோ நாட்டின் வன்முறைமிகுந்த போதப்பொருள் கும்பல்கள் கனடாவினுள் தமது நடவடிக்கைகளை விரிவாக்கும் சாத்தியம் உள்ளதாக தெரியவந்துள்ளது.
போதைப்பொருள் கும்பல்கள் புதிதாக நடவடிக்கைகளை ஆரம்பிக்க அல்லது ஏற்கனவே உள்ள தமது போதைப்பொருள் வலையமைப்புக்களை பலப்படுத்த, இந்த விசா விலக்களிப்பு வாய்ப்பளிக்கும் என கனேடிய எல்லைப் பாதுகாப்பு முகவரக அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது.
சட்ட விரோத குடிவரவால் கனடாவிற்கு ஏற்படக்கூடிய பாதுகாப்பு அச்சுறுத்தல்களுக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பொருட்டு, கனேடிய அதிகாரிகள் மெக்சிக்கோ நாட்டு அதிகாரிகளுடன் நெருக்கமாகப் பணியாற்றி வருவதாகவும்,
கனேடிய அரசு மெக்சிக்கோவிற்கான விசாக் கட்டுப்பாடுகளைத் தளர்த்த முன் பாதுகாப்பு அச்சுறுத்தல் தொடர்பாக மேலதிக கவனம் செலுத்தியிருக்க வேண்டும் என பழைமைவாதக் கட்சியினர் (Consevative) தெரிவித்துள்ளனர்