இரண்டு இளம் பெண்கள் மற்றும் 21-வயதுடைய மனிதன் ஆகிய மூவரும் புதன்கிழமை இடம்பெற்ற வாகன மோதலில் சம்பவ இடத்திலேயே இறந்து விட்டனர்.
இச்சம்பவம் புதன்கிழமை இரவு 9மணியளவில் நெடுஞ்சாலை 6ல் நான்காவது லைனிற்கும் ஐந்தாவது லைனிற்கும் இடையில் இடம் பெற்றுள்ளது.
ஏழு பயணிகளை கொண்ட வாகனம் ஒன்று தென்பகுதி நோக்கி சென்று கொண்டிருக்கையில் வடக்கு பக்கமாக பயணித்து கொண்டிருந்த வாகனம் ஒன்று நடு லைனை கடந்து பயணிகள் இருந்த வானை முன் பக்கத்தில் இடித்துள்ளது.
வான் வீதியை விட்டு விலகி கால்வாய் ஒன்றிற்குள் வீழ்ந்து உருண்டதென பொலிசாரின் தகவல் தெரிவிக்கின்றது.
12-வயது மற்றும் 14-வயதுடைய இரு பெண்கள் சம்பவ இடத்திலேயே இறந்து விட்டனர் என தெரிவித்த பொலிசார் இச்செய்தியை தெரிவிக்க மிகவும் கவலையாக உள்ளதென கூறினார்.
வடக்கு நோக்கி சென்ற வாகனத்தின் சாரதி 21-வயதுடை ஆணும் சம்பவ இடத்திலேயே இறந்து விட்டார்.
வேறு எவரேனும் பாதிக்கப்பட்டனரா என தாங்கள் நம்பவில்லை எனவும் தெரிவித்தார்.
இறந்தவர்கள் குறித்த விபரங்கள் வெளியிடப்படவில்லை.
என்ன நடந்திருக்கும் என்பதை கண்டறியும் முயற்சியில் புலன்விசாரனையாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
ஒருவர் கடுமையான காயங்களுடன் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.மேலும் எத்தனை பேர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்ற விபரங்கள் தெரிய வரவில்லை.
வாகனத்திற்குள் இருந்து பிள்ளைகள் அலறும் சத்தம் கேட்டதாக ஒருவர் தெரிவித்துள்ளார். இதனை தெரிவித்த பெண் தான் சம்பவத்தை 911ஐ அழைத்து தெரியப்படுத்தினார்.
விபத்து Lloyd S. King ஆரம்ப பாடசாலை பகுதியில் இடம்பெற்றதால் பாடசாலை மூடப்பட்டது. கலிடோனியா பகுதி ஹாகெர்ஸ்வில் என்ற இடத்தில் விபத்து நடந்துள்ளது.