மூடப்படும் ரொறொன்ரோவின் மத்திய பகுதி வீதிகள்
2017ஆம் ஆண்டினை வரவேற்கும் வகையிலான புத்தாண்டுக் கொண்டாட்டங்கள் இன்று (சனிக்கிழமை) இரவு பிரமாண்டமான வகையில் இடம்பெறவுள்ள நிலையில், ரொறொன்ரோவின் மத்திய பகுதியில், நாதன் பிலிப்ஸ் சதுக்கத்திற்கு அருகே, அந்த பிராந்தியத்தினை சூழவுள்ள பல்வேறு வீதிகள் போக்குவரத்துக்கு மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இரவு எட்டுமணிக்கு ஆரம்பமாகவுள்ள இந்த புத்தாண்டு வரவேற்பு நிகழ்வில், இரவு 10:00 – 11:55 வரையில் நேரடி பாடல் இசைக் கச்சேரி இடம்பெறவுள்ளது.
அதனை அடுத்து நள்ளிரவில் புத்தாண்டு வரவேற்பினைத் தொடர்ந்து பிரமாண்டமான வானவேடிக்கைகளும் இடம்பெறவுள்ளன.
இவ்வாறான நிகழ்வுகளை சிரமம் இன்றி முன்னெடுக்கும் வகையில் இன்று மாலை 5.30 இலிருந்து நாளை (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 1.30 வரையில் பின்வரும் வீதிகள் மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மூடப்படவுள்ள வீதிகளின் விபரம்,
Queen Street West from Yonge Street to University Avenue
Bay Street from Richmond Street West to Dundas Street West
York Street from Richmond Street West to Queen Street West
Hagerman Street from Elizabeth Street to Bay Street
Albert Street from Bay Street to James Street
James Street from Queen Street West to Albert Street
இதேவேளை, இந்த வீதிகளை வாகனங்கள் மட்டுமின்றி பாதசாரிகளும் பயன்படுத்த முடியாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது
– See more at: http://www.canadamirror.com/canada/77438.html#sthash.amvonITP.dpuf