கண்டியில் ஊடரடங்குச் சட்டம் அமுலில் இருக்கின்ற போதிலும், அங்குள்ள முஸ்லிம்களிடையே அச்சநிலை நீடிக்கிறது.
பட்டப்பகலில் இன்று திங்கட்கிழமை -05- முஸ்லிம்களுக்கு எதிராக பௌத்தசிங்கள காடையர்கள் வன்முறையை பிரயோகித்திருந்த நிலையில், காடையர்கள் இரவு நேரங்களிலும் தமது அடாவடித்தனத்தை காண்பிக்கலாமென நம்பப்படுகிறது.
இந்நிலையில் முஸ்லிம் பகுதிகளின் பாதுகாப்பை பலப்படுத்தவும், அதனை உறுதி செய்யவும் விரைந்து நடவடிக்கை மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட பகுதிகளில் வாழும் முஸ்லிம்கள் உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளனர்.