முழங்காவில் துயிலுமில்லத்தில் பொதுச்சுடர் ஏற்றிவைத்தார் மாவை சேனாதிராஜா
தமிழ் மக்களது விடுதலைக்காக போராடி உயிர்நீத்த மாவீரர்களுக்கு வணக்க நிகழ்வுகள் இன்று மாலை கிளிநொச்சி – கனகபுரம் மற்றும் முழங்காவில் துயிலுமில்லங்களில் மணி ஒலி எழுப்பி சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.
இந்த அஞ்சலி நிகழ்வில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டு உயிர்நீத்த மாவீரர்களுக்கு ஈகைச்சுடரேற்றி அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
பொதுச்சுடரை தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா ஏற்றிவைத்தார். அதனைத் தொடர்ந்து ஈகைச்சுடர் ஏற்றப்படுகின்றது.
தமிழன விடுதலைக்காக தமது உயிர்களை தியாகம் செய்யத வீர மறவர்களை ஒவ்வொரு வருடமும் கார்த்திகை 27ம் திகதி மாவீரர் நாளாக தமிழ் மக்கள் நினைவு கூறுகின்றனர்.
யுத்தத்தின் பின்னர் மாவீரர் துயிலும் இல்லங்களை இராணுவம் தன்வசப்படுத்தி தமிழ்மக்களை மாவீரர் நாளை அனுஸ்டிக்கவிடமால் தடுத்து வந்தனர்.
தங்கள் பிள்ளைகளின் கல்லறைக்கு எப்போது விளக்கேற்றுவோம் என்ற ஏக்கத்துடன் தவித்த வந்தனர் தமிழ் மக்கள். அந்த ஏக்கம் இன்று நிறைவேறியது 9 வருடங்களின் பின்னர் கிளிநொச்சி முழங்காவில்
மாவீரர் துயிலும் இல்லம் கண்ணீர் மழையால் நனைந்தது இன்று மாலை முழங்காவில் மாவீரர் துயிலும் இல்லத்திற்கு வருகை தந்த 5000 அதிகமான மாவீரர்களின் பெற்றோர்கள் உறவினர் தங்களின் உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தி விளக்கேற்றினர்.
சரியாக இன்று மாலை 6.03 மணியளவில் மணி ஒலிக்கப்பட்டு பின்னர் 6.05 பிரதான பொதுச்சுடர் ஏற்றபட்டது. பொதுச்சுடரினை தமிழத் தேசியக்கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் மா.வை சேனாதிராஜா ஏற்றினார். தொடர்ந்து சம நேரத்தில் மாவீரர்களின் பெற்றோர்கள் உறவினர்கள் விளக்கேற்றனர். அப்போது மாவீரர் பாடால் ஒலிக்கபட்டது அப்போது முழங்காவில் மாவீரர் துயிலும் கண்ணீர் மழையால் நனைந்து. அப்போது முழங்காவில் மாவீரர் துயிலும் சோகமயமானது