முன்னணிக்கு வர சந்தானம் போட்ட மாஸ்டர் பிளான்
காமெடியனாக வலம்வந்த சந்தானம் தன் ஹீரோ கனவு நனவானவுடன், காமெடி வேடங்களில் நடிப்பதை முழுமையாக நிறுத்திவிட்டார். அஜித் படத்தில் நடிக்க கேட்டபோது கூட கண்டிப்பாக முடியாது என கூறிவிட்டார்.
மேலும் சந்தானம் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த ‘தில்லுக்கு துட்டு’ படம் பெரிய ஹீரோக்களுக்கு நிகராக வசூல் ஈட்டியது. இதனால் மிகுந்த சந்தோஷத்தில் இருக்கும் அவர் இன்னும் கொஞ்சம் ரிஸ்க் எடுக்க முடிவெடுத்துள்ளார்.
முன்னணியில் இருக்கும் ஹீரோக்கள் போன்று சிக்ஸ் பேக் வைக்க முடிவெடுத்துள்ளார். மேலும் தன் படங்களில் ஆக்ஷன் காட்சிகளை அதிகரிக்கவும் திட்டம் தீட்டியுள்ளார்.