கனடா-பிரம்ரனில் முதியோர் குடியிருப்பு தொடரில் ஞாயிற்றுகிழமை காலை ஏற்பட்ட தீயில் ஒருவர் இறந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரம்ரன் மெயின் வீதி மற்றம் குயின் வீதிக்கருகில் மக்காடி பிளேசில் காலை 6-மணியளவில் விபத்து நடந்துள்ளது. நான்கு அடுக்கு கட்டிடத்தின் நான்காவது தளத்தில் தீப்பிடித்துள்ளதென அறியப்படுகின்றது.
இரண்டு அறைகள் கொண்டு யுனிட்டில் தீ பிடித்தபோது ஒருவர் உள்ளே இருந்துள்ளார். உள்ளே இருந்தவர் வைத்தியசாலைக்கு கொண்டு விரையப்பட்ட போதிலும் பலனளிக்காது இறந்து விட்டார்.
இவர் குறித்த விபரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.
மற்றொருவர் கடுமையான காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.தீயணைப்பு பிரிவினர் ஒருவரும் காயமடைந்துள்ளார்.
கட்டிடம் பூராகவும் வெளியேற்றப்பட்டது.
விபத்திற்கான காரணம் தெரியவரவில்லை. புலன்விசாரனை இடம் பெறுகின்றது.