மானிடோபாவிலுள்ள முதியோர் இல்லமொன்றை, அமெரிக்காவிலிருந்து புகலிடம் கோரிவரும் தஞ்சக் கோரிக்கையாளர்களுக்கான வரவேற்பு மையமாக மானிடோபா அரசாங்கம் மாற்றியுள்ளது.
சுமார் 60 பேர்வரை தங்குவதற்கான வசதிகளுடன் குறித்த மையம் அமைக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க எல்லைக்கு வடக்கே, மானிடோபா மாகாணத்தின் தென்மத்திய பகுதியிலுள்ள எமர்சன் என்ற இடத்திலேயே குறித்த மையம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த வரவேற்பு மையத்தினூடாக, புகலிடம் கோரி வருபவர்களுக்கான தற்காலிக தங்குமிட வசதிகள், உணவு மற்றும் இதர உதவிகள் என்பன பெற்றுக் கொடுக்கப்படும் என மாகாண அரசாங்கம் தெரிவித்துள்ளது. இதேவேளை, அகதி கோரிக்கைக்கான விண்ணப்ப பணிகளும் அங்கு முன்னெடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.