முதல் டெஸ்ட் 4ம் நாள் ஆட்ட நேர முடிவில் நியூசிலாந்து ஸ்கோர் இது தான்!
இந்திய அணி தனது 500வது டெஸ்ட் போட்டியை நியூசிலாந்துக்கு எதிராக கான்பூர் கிரீன் பார்க் மைதானத்தில் விளையாடி வருகிறது .
இந்நிலையில், இந்திய அணி இப்போட்டியின் முதல் இன்னிங்ஸில் 318 ஓட்டங்களை குவித்திருந்தது.
இதைத் தொடர்ந்து, நியூசிலாந்து அணியும் முதல் இன்னிங்ஸில் 262 ஓட்டங்கள் பெற்றிருந்தது.
இப்போட்டியில், இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர்கள் அதிரடியாக பந்து வீசிய நிலையில், ஜடேஜா 5 விக்கெட்டையும், அஸ்வின் 4 விக்கெட்டையும் வீழ்த்தியுள்ளனர்.
இதைத் தொடர்ந்து, 56 ஓட்டங்கள் முன்னிலையில் 2 வது மற்றும் மூன்றாம் நாள் ஆட்டத்தின் முடிவில் 1 விக்கெட்டை இழந்து 159 ஓட்டங்கள் பெற்றிருந்தது.
இந்த ஆட்டத்தில், சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய முரளி விஜய் 64 ஓட்டங்களும், புஜாரா 50 ஓட்டங்களையும் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.
இந்நிலையில், 4 வது நாள் ஆட்டமான இன்று முரளி விஜய் (76 ஓட்டங்கள்), கோஹ்லியும் அடுத்தடுத்து ஆட்டமிழக்க அடுத்து ஜோடி சேர்ந்த ஜடேஜாவும், ரோகித் சர்மாவும் சிறப்பாக ஆடி அணியின் ஓட்ட விகிதத்தை அதிகரித்தனர்.
இதைத் தொடர்ந்து, இந்திய அணி 5 விக்கெட் இழப்புக்கு 377 ஓட்டங்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டத்தை டிக்ளேர் செய்தது.
அடுத்ததாக களமிறங்கிய நியூசிலாந்து அணி முதல் டெஸ்டை கைப்பற்ற 434 ஓட்டங்கள் தேவை என்ற இலக்குடன் 2-வது இன்னிங்ஸை விளையாடியது.
தொடக்க வீரர்களாக களமிறங்கிய கப்டில் ஓட்டங்களின்றியும், டாம் லேத்தம் 2 ஓட்டங்களிலும் ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தனர்.
அடுத்து களமிறங்கிய கேன் வில்லியம்சன் 25 ஓட்டங்களும், ரோஸ் டெய்லர் 17 ஓட்டங்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.
4ம் நாள் ஆட்டநேர முடிவில் நியூசிலாந்து அணி 37 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 93 ஓட்டங்கள் எடுத்துள்ளது. லுக் ரோஞ்சி 38 ஓட்டங்களுடனும், மிட்செல் சாண்ட்னர் 8 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.
இந்திய அணியின் அஸ்வின் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
நியூசிலாந்து அணி இன்னும் 341 ஒட்டங்கள் எடுத்தால் மட்டுமே இந்திய அணியை வீழ்த்த முடியும்.